பாலியல் குற்றச்சாட்டில் கேன் லிம் குற்றமற்றவர் என தீர்ப்பு…!!!

சிங்கப்பூர்:Singapore Idol பாட்டுத்திறன் போட்டியின் முன்னாள் நடுவரான திரு.கேன் லிம் சீ சியாங் என்பவர் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியான கருத்துகளைத் தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவர் எதிர்கொள்ளும் 5 வழக்குகளில் இதுவும் ஒன்று.

2012 ஆம் ஆண்டில், திரு.லிம் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட 26 வயதான பெண், கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்தக் குற்றத்திற்காக திரு.லிம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் (2023) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

ஆனால் திரு.லிம் அந்தப் பெண் பொய் சொன்னதாகவும், தனது கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டதாகவும் வாதிட்டார்.

இதேபோன்று அவர் மீது மேலும் 4 வழக்குகள் உள்ளன.நான்கு வெவ்வேறு பெண்கள் இவர் மீது 6 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் ஓராண்டு வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.