இந்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி குவாமிலும் அதைச் சுற்றி உள்ள கடற்பகுதியிலும் Pacific Griffin எனப்படும் பயிற்சி தொடங்கப்பட்டது.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான 4-ஆவது கூட்டு கடற்படைப் பயிற்சி நிறைவு பெற்றது.
அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான சோதனை நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது, கடற்பகுதிகளில் வெடிகுண்டுகளை அகற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மேலும், இருநாட்டு கடற்படை அதிகாரிகளும் Mawar சூறாவளியால் பாதிக்கப்பட்ட குவாம் மக்களுக்கான சமூக உறவு நடவடிக்கைகளிலும் பங்கேற்றனர்.