சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களுக்கு இனி இந்த பிரிவிலும் வேலை வாய்ப்பு!! விரைவில்....

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் அவசர மருத்துவ சேவைப் பிரிவுக்கு வெளிநாட்டினரை பணியில் அமர்த்தப் போவதாக அறிவித்துள்ளது.
இது அடுத்த மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரர்களும்,நிரந்தரவாசிகளும் தற்போது குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவச் சேவைப் பணிபுரிகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் அவசர சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் வயதான மக்கள் தொகை அதிகரிக்கும் போது தேவையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
உதவி கேட்டு வரும் அழைப்புகளில் பெரும்பாலும் 65 வயதைக் கடந்த வயதானவர்கள் என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
கடந்த ஆண்டு அவசர மருத்துவச் சேவைகளுக்காக 245279 அழைப்புகள் வந்துள்ளதாக குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
தினந்தோறும் சுமார் 672 அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்தது.
2014 ஆம் ஆண்டில் வந்த அழைப்புகளின் எண்ணிக்கையை விட அது 57 சதவீதம் அதிகம்.
மேலும் இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மருத்துவ உதவியாளர்,அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் வேலைகளில் வேலை செய்யும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அந்த வாய்ப்பு வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan