சிங்கப்பூரில் வேலை மோசடி குற்றங்கள் சுமார் 5,700 க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை குறைந்தது 6,600 பேர் வேலை மோசடி சம்பவங்களில் சிக்கி உள்ளனர். குறைந்தது $96.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
மோசடி கும்பல் முதலில் பாதிக்கப்பட்டவர்களின் வாட்ஸாப் அல்லது டெலெக்ராம் மூலம் ஒரு கணக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு தகவல் அனுப்பப்படும்.
இதில் அவர்களுக்கு சம்பளமாக தொகை கொடுக்கப்படும் என்பார்கள்.இன்னும் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறுவார்கள்.
அதன்பின் வாட்ஸாப் அல்லது டெலெக்ராம் குரூப்களில் சேர்ப்பார்கள்.
அதன் ஒரு கட்டமாக மோசடிகாரர்களின் வங்கி கணக்கு அனுப்புவார்கள்.அதில் பணத்தைப் போட வேண்டும் என்று கூறுவார்கள்.
அவர்கள் வேலை செய்ததற்கான சம்பளம் கிடைக்காத போது ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள் என்று காவல்துறை கூறியது.
ஆன்லைன் மோசடிகாரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.