பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!!

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!!

ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகளுக்குப் பிறகு பிராந்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தோக்கியோவின் பயணம் அமைந்துள்ளது.

அதிபர் டிரம்பின் வரிகளை எதிர்கொள்ள தலைவர்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு மாற்றாக பெய்ஜிங்கை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீன அதிபர் சி சின்பிங் தென்கிழக்கு ஆசியாவிற்கு முன்னர் பயணம் செய்திருந்தார்.

ஜப்பானிய பிரதமர் இஷிபா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளை உலகப் பொருளாதாரத்தை இயக்கும் “வளர்ச்சி நிலையம் ” என்று கூறினார்.

மேலும் இன்று இஷிபா வியட்நாமிய பிரதமர் பாம் மின் சின்னை சந்திப்பார்.

2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட “அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி” திட்டத்தின் கீழ் வியட்நாமுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான ஜப்பானின் நோக்கத்தை தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஷிபா மற்றும் சின் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு முடிவு ஆவணம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இரு அரசாங்கங்களின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.