பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!!
பொன்னமராவதி,மார்ச்.10- பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா இடையாத்தூரில் உள்ள பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமை ஏற்று கொடியசைத்து உறுதிமொழி வாசித்து போட்டியை தொடக்கி வைத்தார். இதில் இடையாத்தூர் மிராஸ் முருகேசன் பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் 800 ஜல்லிக்கட்டு காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பல்வேறு சுற்றுகளாக களம் இறங்கி கலந்து கொண்டு வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளையை கட்டித் தழுவி விளையாடினர். இதில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்கிய வீரருக்கும் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு காளைக்கும் தங்க நாணையம், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், அண்டா, ரொக்க பணம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
போட்டிக்கான ஏற்பாடுகளை இடையாத்தூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர். ஜல்லிக்கட்டில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ஜல்லிக்கட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.