சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!!

சீனாவின் 30 வயது தேநீர் நிறுவன உரிமையாளருக்கு அடித்த ஜாக்பாட்..!!!

சீனாவில் உள்ள சாஜி என்ற தேநீர் நிறுவனத்தின் நிறுவனர் 30 வயதில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

அமெரிக்க பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் நுழைந்த சிறிது நேரத்திலேயே ஸாங் ஜுன்ஜியே தனது செல்வத்தை குவித்தார்.

உலகெங்கிலும் பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட சாஜி கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 17) அமெரிக்க பங்குச் சந்தையில் அறிமுகமானது.

அமெரிக்க நேரப்படி நண்பகலில் நிறுவனத்தின் பங்குகள் 40 சதவீதம் உயர்ந்ததாக புளூம்பர்க் நிறுவனம் தெரிவித்தது.

சாஜி நிறுவனத்தில் 54 சதவீத பங்குகளை வைத்திருக்கும் திரு.ஸாங் மிகவும் செல்வந்தராகிவிட்டார்.

ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 2.6 பில்லியன் டாலர்கள் (S$3.4 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

சாஜி நிறுவனத்தில் உள்ள பங்குகளால் மட்டுமே அவரது சொத்துக்கள் சேர்ந்ததாக தெரிகிறது.

அமெரிக்காவில் தேநீர் பானங்கள் பிரபலமாக உள்ளன.

பங்குச் சந்தையில் சாஜி நிறுவனம் இவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டதற்கு இது ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.