குரங்கம்மை நோய் தொற்றின் அறிகுறிகள் வெளிப்பட 21 நாட்கள் ஆகலாம்...!!
சிங்கப்பூர்: mpox எனும் குரங்கம்மை தொற்றின் அறிகுறிகள் வெளிப்பட 21 நாட்கள் வரை ஆகலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே எல்லையில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளது.
அறிகுறிகள் வெளிப்பட்டு அவர்கள் கண்டறியப்படுவதற்கு முன்னர் பலர் எல்லைக் கடப்புகளை கடந்து சென்றிருக்கலாம் என்று அமைச்சகம் கூறியது.
இந்த நேரத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் mpox நோய்த்தொற்றை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.
மேலும் கோவிட் போல mpox எளிதில் பரவாது என்று அவர் குறிப்பிட்டார்.
மருத்துவர்கள் அனைவரும் mpox அறிகுறிகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
mpox இருப்பது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் குணமடையும் வரை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட மருத்துவமனை வசதிகள் இதற்குப் போதுமானவை என்று திரு.ஓங் கூறினார்.
ஒருவருக்கு இந்நோய் வந்து மற்றொருவருக்குப் பரவினாலும், அது மிக நெருங்கிய தொடர்பு மூலம் வந்திருக்கும்.
நோய் தொற்று இருப்பவருடன் அதிக நேரம் செலவிடுவது மற்றும் நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவும் நோயாக இருக்கிறது.
இந்த வைரஸ் காற்றில் பரவாது.ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பரவியுள்ளதாக திரு.ஓங் தெரிவித்தார்.
Follow us on : click here