சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் குறித்து சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong அவருடைய Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டை முன்னேறி செல்வதற்கான புதிய பாதையை வகுக்கும் வகையில் இந்த புதிய திட்டங்கள் இருக்கின்றது என்றார்.
கோவிட்-19 கிருமி பரவல் காலகட்டத்தில் இருந்து சிங்கப்பூர் வலுவாக மீண்டு வந்து விட்டது.அதன்பின் பொருளியல் வளர்ச்சியும் அடையும். இது சற்று மெதுவாக தான் நடக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது பணவீக்கம், உலக அளவில் அரசியல் ரீதியான சவால் முதலியவற்றை எதிர்நோக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் இருந்து சிங்கப்பூரர்கள் கடந்து வர அரசாங்கம் உதவி செய்யும் என்றும் கூறினார்.
இவ்வாண்டின் வரவு செலவு திட்ட நடவடிக்கைகள் வர்த்தகங்கள், குடும்பங்கள்,தனி நபர்கள் ஆகியோர்களுக்கு உதவி அளிக்கும் வகையில் இருக்கிறது என்றார்.
பல தலைமுறையினர் சிங்கப்பூரை முன்னோக்கி கொண்டு செல்ல காலங்காலமாக உழைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.இனி நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைவது உறுதி செய்வது தங்கள் தலைமுறையின் பொறுப்பாகும் என்று கூறினார்.
இனி வரப் போகின்ற எதிர்கால தலைமுறைகளுக்காக யோசிப்பது தங்கள் பொறுப்பு என்றும் கூறினார்.
அதேபோல் அவர்களது எதிர்காலத்துக்கு திட்டமிடுவது தங்கள் பொறுப்பு என்றும் கூறினார்.