பின் தங்கியவர்களுக்கு உதவ இணைந்து செயல்படுவது முக்கியம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசாங்கமும் மக்களும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதை ஒரே இலக்காக கொண்டுள்ளனர் கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர்களுக்கான அமைச்சர் எட்வின் தோங் கூறினார்.
வங்கி ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், பின்தங்கியவர்களுக்கு உதவ ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்றார்.
சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களை ஆராய்ந்து அவர்களை சமுதாயத்தில் மேன்மையடையச் செய்வதற்கு உண்டான வழியை ஆராய வேண்டியது அவசியம் என்று தோங் கூறினார்.
சிங்கப்பூர் அரசானது பின் தங்கிய குடும்பங்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.இதன் மூலம் வருமானத்தில் பின் தங்கிய குடும்பங்கள் பயன்பெறும்.பின் தங்கிய குடும்பங்களை மேன்மை அடையச் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம்.சில தொண்டூழியர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே அடுத்த தலைமுறை சிறப்பாக அமைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தோங் கூறினார்.
Follow us on : click here