வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!!

வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதற்கு பதிலாக பேருந்துகளில் ஏற்றி செல்வது சிரமம்!!

போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஏமி கோர், வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் ஏற்றி செல்வதைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றார்.

விபத்துகளைக் குறைக்க அரசாங்கம் மூன்று அம்ச அணுகுமுறையை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

முதலாவதாக, போக்குவரத்து தேவையைக் குறைத்து ஊழியர்களை வேலை செய்யும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அடுத்து, அரசாங்கம் நிறுவனங்கள் ஊழியர்களை லாரிக்கு பதிலாக பேருந்தில் ஏற்றிச் செல்ல ஊக்குவிக்கிறது.

இறுதியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன.

ஓர் உதாரணமாக ஓட்டுநர்கள் போதுமான அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.

சிங்கப்பூரில் பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் அனைத்து ஊழியர்களையும் லாரிகளுக்கு பதிலாக பேருந்தில் ஏற்றி செல்வது கடினம் என்று டாக்டர் ஏமி கோர்.

நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் கேட்ட கேள்விக்கு டாக்டர் டான் பதிலளித்தார்.