தீவெங்கும் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! பிடிப்பட்ட 123 பேர்!!
சிங்கப்பூரில் முறையான உரிமம் இல்லாமல் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 123 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் உள்ளவர்கள் 15 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள்.
தீவு முழுவதும் 7 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.
இந்த அதிரடி சோதனை ஜூலை 17-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
அவர்களில் 7 பேர் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததாக முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
மேலும் உரிமம் இல்லாமல் கடன் வழங்கிய நடவடிக்கைகளுக்கு உதவி செய்ததாக 56 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் ஆட்டோமேடேட் மெஷின்களை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்ததாக கூறப்படுகிறது.
முறையான உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக கடன் கொடுப்பவர்களுக்கு தங்களது வங்கி அட்டைகள், அட்டையின் தனிப்பட்ட அடையாள எண் உள்ளிட்டவைகளை அளித்ததாக 60 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதற்காக வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதும் தெரியவந்துள்ளது.
விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here