ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: பெங்களூரு எஃப்சி அணி Vs மோகன் பாகன் அணி இன்று மோதல்..!!!

ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப் போட்டியில் மோகன் பாகன் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோத உள்ளன.
இரு அணிகள் மோதும் இறுதிப் போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்தின் 11வது சீசன் நடந்து வருகிறது.13 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் அரை இறுதியில் மோகன் பாகன் அணியும் பெங்களூரு எஃப்சி அணியும் தகுதி பெற்றது.
மோகன் பாகன் அணி 24 போட்டிகளில் 17 வெற்றிகள், 5 டிராக்கள் மற்றும் 2 தோல்விகளுடன் 56 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த நடந்த அரையிறுதியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி மோகன் பாகன் அணி 4வது முறையாக (2020-21, 2022-23, 2023-24, 2024-25) இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
லீக் சுற்று கோல் அடித்த ஜேமி மெக்லாரன் (11 கோல்கள்), ஜேசன் ஸ்டீவன் கம்மிங்ஸ் (6), சுபாசிஷ் போஸ் (6), மற்றும் மன்வீர் சிங் (5) ஆகியோர் மோகன் பாகன் அணிக்கு இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல உதவ முடிந்தால், அவர்கள் சாம்பியன்களாக முடிசூட்டப்படலாம்.
லீக் சுற்றில் 3வது இடத்தைப் பிடித்த பெங்களூரு அணி (38 புள்ளிகள், 11 வெற்றிகள், 5 டிராக்கள், 8 தோல்விகள்), பிளே-ஆஃப்களில் நடப்பு சாம்பியனான மும்பை அணியை வீழ்த்தியது. பின்னர் அரையிறுதியில் கோவா அணியை வீழ்த்தி 4வது முறையாக (2017-18, 2018-19, 2022-23, 2024-25) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
லீக் சுற்றில் பங்களித்த சுனில் சேத்ரி (14 கோல்கள்), எட்கர் (9), ரியான் வில்லியம்ஸ் (7) ஆகியோர் மீண்டும் பிரகாசிக்க முடிந்தால், பெங்களூரு இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகலாம்.
வெற்றி பெறும் அணிக்கு ரூ.6 கோடி பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.3 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்படும். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan