சிங்கப்பூர் செல்வதற்கு இது தான் வழியா?

சிங்கப்பூர் செல்வதற்கு இது தான் வழியா?

சிங்கப்பூர்  கண்டிப்பாக சென்றுதான் ஆகவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளன.

1.முன்பணம் கட்டுவது:

தயவு செய்து முன் பின் தெரியாதவர்களிடம் உங்கள் டாக்குமெண்ட் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்காதீர்கள். அதேபோல் முன்பணம் அதிக தொகையாக செலுத்த வேண்டாம்.MOM இல் பதிவு செய்ய குறைந்த தொகையே செலவாகும். குறைந்தது ₹10000 இந்திய ரூபாய் மதிப்பு மட்டுமே செலவாகும்.

2.காத்திருக்கும் நேரம் :

வேலைக்காக முன்பணம் செலுத்த கூறுவார்கள். அதற்கென காத்திருப்பு நேரத்தையும் அவர்கள் கூறுவார்கள்.நீங்கள் காத்திருக்கும் நேரம் மதிப்பானதா இல்லையா என்பதை சற்று சிந்தித்து கொள்ளுங்கள். ஏனென்றால், நீங்கள் பணம் கட்டிவிட்டு காத்திருக்கும் சமயத்தில் உங்களுக்கேற்ற சரியான வேலை வருவதற்கு கூட வாய்ப்புள்ளது. நீங்கள் காத்திருக்க்கும் நேரம் எத்தனை நாட்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.அதிகத்தொகையை முன்பணமாக கட்டாமல் இருப்பது மிகவும் நல்லது.

3. வேலைப் பற்றிய தகவல் :

என்ன வேலை என்று தெரியாமல் எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் சிங்கப்பூர் சென்று அங்கு சிரமப்படுவது. குறிப்பாக அவர்கள் அதிகமாக படித்தவர்கள் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை சிங்கப்பூர் சென்றால் போதும் என்ற எண்ணத்தில் shipyard, pcm permit போன்ற வேலைகளுக்கு சென்று, தாய் நாட்டிற்கும் செல்ல முடியாமல் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

இப்பதிவில் நீங்கள் சிங்கப்பூர் செல்வதற்கு தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் அனைத்தையும் விசாரித்து தெரிந்து கொண்டு சிங்கப்பூர் செல்வது மிகவும் நல்லது.