2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா?

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா?

ஜப்பானுக்கு சென்ற வருடம் 35 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல 2019 ஆம் ஆண்டும் 32 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகைப் புரிந்துள்ளனர்.

சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை ஜப்பானுக்கு 33 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.

சென்ற 4 வருடங்களை விட இந்த காலகட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சீனாவில் இருந்தும் தென் கொரியாவில் இருந்தும் ஜப்பானுக்கு வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 60 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும்,மேலும் அதற்கான நடவடிக்கைகளை ஜப்பான் மேற்கொண்டு வருகிறது.

இந்த இலக்கை அடைய ஜப்பான் அரசு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு வசதியாக பத்து ஆண்டு விசாவை தோக்கியோ அண்மையில் அறிமுகம் செய்தது.

ஜப்பானுக்கு வலுவான விமானச் சேவைகள் மற்றும் பலவீனமடைந்துள்ள ஜப்பான் யென்னின் மதிப்பு ஆகியவைதான் சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.