சிங்கப்பூருக்கு செல்ல சிறந்த வழி இதுவா? ஆனால் இதிலும் இவ்வளவு சிக்கலா?

சிங்கப்பூருக்கு செல்ல சிறந்த வழி இதுவா? ஆனால் இதிலும் இவ்வளவு சிக்கலா?

சிங்கப்பூருக்கு செல்ல பல பாஸ்கள் உள்ளன. பல பாஸ்கள் இருந்தாலும் டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்வது மிகவும் சிறந்தது.இந்தியாவில் டெஸ்ட் அடிக்க முடியுமா? எங்கு அடிக்கிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.தற்போது இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் டெஸ்ட் அடிப்பதற்கான சூழ்நிலை எவ்வாறு உள்ளது? என்ற சந்தேகமும் இருக்கிறது.அதற்கான விவரங்களை இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதற்கான தற்போதைய நிலை :

இந்தியாவில் தற்போது சில சென்டர்கள் டெஸ்ட் அடிக்க வைத்து சிங்கப்பூருக்கு ஆட்களை அனுப்பி கொண்டு தான் இருக்கிறார்கள்.கடந்த இரண்டு வருடங்களாக கோட்டா என்ற பிரச்சனை நிலவி வருகிறது.இதில் பலர் டெஸ்ட் அடித்து சான்றிதழ் வாங்கிய பிறகும் சிங்கப்பூர் செல்லாததால் இந்த நிலைமை வந்தது.
தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து ஆட்கள் டெஸ்ட் அடித்து வருவதனாலும் இந்தியாவில் டெஸ்ட் அடிப்பது குறைந்துள்ளது.

தோராயமாக 500 பேருக்கு மேல் அட்மிஷன் போட்டால் அதில் 100 பேர்கள் மட்டுமே மெயின் டெஸ்ட் செல்கின்றனர். டெஸ்ட் அடிப்பதில் சில கட்டுப்பாடு இருப்பதினால் பலர் முன்பணத்தை மட்டும் கட்டி விட்டு சிங்கப்பூருக்கு போக முடியாமல் இருக்கிறார்கள். சென்னையில் ஒரு சில இன்ஸ்டியூட் திறந்திருக்கிறது.ஒரு சில இன்ஸ்டியூட் சென்னையில் டிரைனிங் கொடுத்து ஹைதரபாத் சென்று டெஸ்ட் அடிக்க வைக்கின்றனர்.
சென்டர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பணம் கட்டியவர்களை இப்பொழுதுதான் அழைக்கிறார்கள். நீங்கள் டெஸ்ட் அடித்து தான் சிங்கப்பூர் போவேன் என்று உறுதியாக இருந்தால், நீங்கள் இன்ஸ்டியூட்டை தொடர்பு கொண்டு இப்போது அட்மிஷன் போட்டால் எப்போது டெஸ்ட் அடிக்கலாம்?காத்திருப்பு நாட்கள் எத்தனை? என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்ட பின் குறைவான தொகையை முன்பணமாக செலுத்தி உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு அட்மிஷன் போட்டபின் நீங்கள் டெஸ்ட் அடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று கூறினால் நீங்கள் அதுவரை வேறு ஏதாவது வேலைக்கு சென்று வேலை பாருங்கள்.

எவ்வளவு செலவாகும்?

டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதற்கு குறைந்தது 5 லட்சம் முதல் ஆறரை லட்சம் வரை செலவாகும்.

இதுதான் இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதற்கான தற்போதைய நிலை.

அடுத்ததாக சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது பற்றி பார்ப்போம் :

சிங்கப்பூருக்கு PCM, Shipyard பெர்மிட் போன்ற பெர்மிட்களில் சென்று அதன் பின் டெஸ்ட் அடிக்க முடியுமா? என்ற சந்தேகம் பலரிடம் இருக்கும்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த நிலைமை இருந்தது. PCM பெர்மிட்டில் சென்றால் நீங்கள் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் வைத்து டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்தது.அதன்பின் டெஸ்ட் அடித்த சான்றிதழ் வைத்து கன்ஸ்டிரக்ஷன் பெர்மிட்டுக்கு மாறி கொள்ளலாம். ஆனால் இப்போது நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனிகளில் இருந்து லெட்டர் கொடுத்தால் மட்டுமே டெஸ்ட் அடிக்க அனுமதி அளிக்கப்படும்.தற்போது டெஸ்ட் அடிப்பதற்கு கம்பெனி லெட்டர் கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது.ஆனால் ஒரு சில ஏஜென்ட்கள் நீங்கள் சிங்கப்பூருக்கு சென்ற பின் டெஸ்ட் அடிக்கலாம் என்று கூறி அதிகமான கட்டணத்தொகையை பெறுகிறார்கள். இவ்வாறு ஏஜென்ட்கள் கூறினால் நீங்கள் எந்த பெர்மிட்டில் செல்ல உள்ளீர்களோ அதற்கு மட்டுமே கட்டணம் செலுத்துவேன் என்று கூறிவிடுங்கள்.

S-Pass, E- Pass இல் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் இருந்தால் மட்டுமே லெட்டர் இல்லாமல் டெஸ்ட் அடிக்கலாம். வேறு எந்த துறையில் இருந்தாலும் லெட்டர் இருந்தால் மட்டுமே டெஸ்ட் அடிக்க முடியும். தற்போது இந்த விதிமுறை சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ளது.