குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா?

குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா?

அஜித்குமார் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது.இப்படம் உலகளவில் 199 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா தேவ் என்ற நடிகர் நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் மகன் கதாபாத்திரத்துக்கு முதன்முதலில் மலையாள சென்சேஷனல் நடிகர் நஸ்லன் நடிக்கவிருந்தார்.நடிகர் நஸ்லன் பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர்.அஜித்துக்கு மகனாக நடிக்க முதன்முதலில் இவரை அணுகியுள்ளனர்.ஆனால் அவருக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.அதனால் அவருக்கு பதிலாக சலார் படத்தில் நடித்து பிரபலமான கார்த்திகேயா தேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

Exit mobile version