பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா...??

பிக்பாஸ் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னராகி ஃபேமஸ் ஆனவர் தான் அர்ச்சனா.. இவர் தனது நீண்ட நாள் காதலரான அருண் பிரசாத்தை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சமீப காலமாகவே சின்னத்திரையில் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது அர்ச்சனா-அருண் பிரசாத் ஜோடி இணைகிறது.இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் இருவரும் காதலிக்கிறார்களா என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் இவர்களின் திருமண அறிவிப்பானது அந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 இன் டைட்டில் பின்னரான பிறகு அர்ச்சனாவிற்கு பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. சமீபத்தில் அவர் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் இன்னும் சில படங்கள் அவரது கைவசம் உள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்து புகழ்பெற்றவர் தான் அருண் பிரசாத். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 8 இல் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல கேமராக்களின் முன்பு அர்ச்சனா உடனான தனது காதலை வெளிப்படையாக அறிவித்தார் அருண் பிரசாத்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், தங்களது திருமணம் குறித்து இரு விட்டாரும் பேசி வருவதாகவும் விரைவில் திருமண தேதி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அருண் பிரசாத் கூறியுள்ளார்.

காதலித்து திருமணம் செய்யும் சின்னத்திரை ஜோடிகளின் பட்டியலில் விரைவில் இணைய உள்ள அர்ச்சனா- அருண் பிரசாத் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg