சிங்கப்பூர் சென்றவுடன் உங்கள் சம்பளத்தை உயர்த்த இப்படி ஓர் வழியா?

சிங்கப்பூர் சென்றவுடன் உங்கள் சம்பளத்தை உயர்த்த இப்படி ஓர் வழியா?

சிங்கப்பூர் செல்வர்களுக்கு சம்பளம் முதலில் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் எவ்வளவு இருந்தாலும் சிங்கப்பூரில் முதலில் குறைந்த சம்பளமே கிடைக்கும்.

அங்கு சென்றவுடன் சம்பள உயர்வு வேண்டுமென்றால் உங்கள் திறமையையும் வளர்த்து கொள்ள வேண்டும். அங்கு உங்கள் திறமையை வளர்த்து கொள்ள பல கோர்ஸ்கள் உள்ளன. இதன் மூலமாக உங்கள் வேலை மற்றும் சம்பளத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம்.

ஒரு சில கம்பெனிகள் அவர்களிடம் ஜெனரல் வேலையில் பார்க்கும் ஊழியர்களை கோர்ஸ் படிக்க வைப்பார்கள்.இதனால் பெரும்பாலானோர் சிங்கப்பூரை தேர்ந்தெடுக்கின்றனர்.

நிறைய கோர்ஸ்கள் உள்ளன. அதில் 5 கோர்ஸ்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

▫️survey engineer

▫️safety co-ordinator

▫️lifting supervisor

▫️Excavator operator

▫️safety supervisor

Survey Engineer:

Survey engineer என்றால் நிலத்தை அளப்பது.

நீங்கள் ஒர்க் பர்மீட்டில் இருந்தாலும் சுலபமாக S Pass, E Pass க்கு மாறிவிட முடியும்.ஆனால் இந்த கோர்ஸ் முடித்தவுடன் உங்களால் மாற முடியாது.நீங்கள் அனுபவம் பெற்றால் மட்டுமே உங்களால் மாற முடியும். இது ஒரு வருடக் கோர்ஸ்.

இதில் கணக்கு பாடம் இருக்கும்.ஓரளவு படித்தவர்களுக்கு மட்டுமே இந்த கோர்ஸ் எளிமையாக இருக்கும்.

இது ஒரு நல்ல கோர்ஸ் ஆகும் இது முடித்தாலே நல்ல சம்பளம் வாங்கலாம்.

Safety co-ordinator:

ஊழியர்கள் பாதுகாப்பாக வேலை பார்க்கிறார்களா என்பதை கவனிக்கும் வேலைதான் Safety co-ordinator.

இது எளிமையான கோர்ஸ். ஒரு நல்ல பொசிஷனுக்கு செல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.

Lifting supervisor:

இந்த வேலை கடினமாக இருக்கும்.நீங்கள் அங்கு சென்றவுடன் உங்கள் திறமையை வளர்த்து கொள்ள இதுவும் மிகச்சிறந்த வழி.

Excavator operator:

இந்தியாவில் JCB ஓட்டுவதை சிங்கப்பூரில் எக்ஸ்லேட்டர் ஆப்ரேட்டர் என்று கூறுவார்கள்.

இதுவும் ஒரு நல்ல கோர்ஸ். இதன் மூலம் ஜெண்டர் ஒர்க்கர் ஆக சென்று இந்த கோர்ஸ் முடித்தவுடன் அடுத்த நிலைக்கு மாறிவிடலாம்.

Safety supervisor:

வேலை நடக்கும் இடத்தில் விபத்து நேர்ந்து விடாமல் இருப்பதை பார்த்துக் கொள்வது தான் Safety Supervisor.

Safety supervisor கோர்ஸ் முடித்த பிறகு Safety co-ordinator course படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.

இந்த கோர்ஸ் முடித்தாலும் நல்ல சம்பளம் கிடைக்கும்.

நீங்கள் சிங்கப்பூர் சென்றவுடன் உங்கள் திறமையை வளர்த்து கொள்ள இத்தகைய கோர்ஸ்களைப் படித்து சம்பளம் மற்றும் வேலையில் உயர்வு பெற்று வாழ்வில் வெற்றி அடையுங்கள். சிங்கப்பூருக்கு முதன்முறையாக செல்வோருக்கு இப்பதிவை ஷேர் செய்யுங்கள்.

இது போன்ற பயனுள்ள தகவல்களைத் தெரிந்து கொள்ள www.sgtamilan.com இணையபக்கத்தில் இணைந்திருங்கள்.