சிங்கப்பூரில் Release Pass என்று ஒன்று உள்ளதா!!

சிங்கப்பூரில் Release Pass என்று ஒன்று உள்ளதா!!

சிங்கப்பூரில் Release Pass என்று ஒன்று உள்ளதா!!

S-Pass தெரியும் E-Pass தெரியும் அது என்னய்யா Release Pass என்று நிறைய பேர் கேட்கலாம்.
சிங்கப்பூரை பொறுத்தவரை நாம் வேலைக்குச் செல்ல பலவிதமான Permit (பெர்மிட்கள்) உள்ளது.
அதில் ஒரு சில பெர்மிட்களை பற்றி ஒரு சிலருக்கு தெரிவதில்லை.

இது போன்று தெரியாதவர்களிடம் ஒரு சில ஏஜெண்டுகள் Release Pass என்று ஒன்று உள்ளதாகவும் அதன் மூலம் சிங்கப்பூர் செல்லலாம் என்றும் பொய்யான தகவலை சொல்லி அதற்காக ஒரு பெரிய தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.

அதன் பிறகு அவர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள ஏதாவது ஒரு கம்பெனியில் பாஸ் எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.

ஆனால் நீங்கள் அந்த கம்பெனியில் வேலை செய்யாமல் வெளியில் வேலை தேடிக் கொள்ளுமாறும் கூறுவார்கள்.

இதற்குப் பெயர்தான் Release Pass. ஆனால் சிங்கப்பூரின் சட்ட திட்டம் படி இவ்வாறு செய்வது தவறு.இது போன்ற தவறுகளை செய்து அரசு அதிகாரிகளால் நீங்கள் பிடிப்பட்டால் உங்களுக்கு சிறை தண்டனை கிடைக்கக்கூட வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் நீங்கள் இவ்வாறு சிங்கப்பூர் செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு வேலையும் கிடைக்காது நீங்கள் கட்டிய பணத்தை கூட உங்களால் திரும்ப சம்பாதிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நீங்கள் பயந்து கொண்டே தான் வாழ வேண்டும் ஆகையால் தயவு செய்து ஏஜெண்டுகளை நம்பி கண்ணை மூடிக்கொண்டு இது போன்ற வேலைக்கு சிங்கப்பூர் வரவேண்டாம்.

உங்களுக்கு சரியான முறையில் அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகள் மூலம் நமது Sgtamilan வேலை வாங்கி கொடுக்கும்.

அல்லது அரசு அனுமதி பெற்ற ஏஜெண்டுகளிடம் சென்று சரியான பாஸ்ஸில் சிங்கப்பூர் செல்லவும்.

 

Follow us on : click here ⬇️