சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்?

சிங்கப்பூரில் அடையாள அட்டை, பாஸ்போர்ட் பெற முன்பதிவு தேவையிருக்காதா!! எப்போது நடைமுறைக்கு வரும்?

சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின்(ICA) புதிய சேவைகள் நிலையம் திறக்கப்பட உள்ளது. புதிய நிலையம் திறக்க உள்ளதாக குறித்து 2019-ஆம் ஆண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய நிலையத்தில் சொந்தமாக பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.அதற்காக முன்பதிவு செய்ய தேவையில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும்.

இந்த விவரம் குறித்து நேற்று(மே 17) ஆணையம் நடத்திய வருடாந்திர வேலைத்திட்டக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

iSmart எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட அறிவார்ந்த தகவல் மேலாண்மை அமைப்பு இயந்திர தகவல்களைச் சேகரித்து கொள்ளும்.அதன் பிறகு பத்திரங்களை அளிக்கும்.

அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதையும் பெறுவதையும் எளிதாக்க ஆணையம் விரும்புவதாக கூறியது.

இந்த புதிய ISC நிலையம் ஆணையத்தின் பல்வேறு சேவை நிலையங்கள் ஒருங்கிணைந்து ஒரே நிலையமாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள ICA கட்டிடத்திற்கு அருகே அமைந்திருக்கும்.

சுமார் 95 சதவீத சேவைகள் மின்னிலக்கமயமாக்கப்பட்டுள்ளன.

MYICA செயலி,MYICA e-service இணையப்பக்கம் அல்லது FileSG by GovTech தளம் மூலமாக பொதுமக்கள் மின்னிலக்க ஆவணங்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.