சிங்கப்பூர் குடும்பங்கள் இந்தோனேசிய வீட்டு வேலை பார்க்கும் பெண்களை புதிதாக வேலைக்கு அமர்த்துவதில் தாமதங்களை எதிர் நோக்கக்கூடும்.
இந்தோனேசியாவில் ஆள் கடத்தலை தடுப்பதற்காக சோதனை நடவடிக்கைகளை தீவிரபடுத்தி உள்ளது.
வெளிநாட்டிற்கு செல்லும் குடிமக்கள் மீதான சோதனை, எல்லைக் கட்டுப்பாடு சோதனைகள் போன்றவை முடக்கி விடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு செல்வோர், எல்லை தாண்டி செல்வோரின் ஆவணங்கள் பலமுறை சோதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
எனவே, புதிய பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்க இரண்டு மாதங்கள் வரை தாமதமாகலாம்.
அந்தத் தகவலை இந்தோனேசிய தூதரகத்தின் தொழிலாளர் துறை அதிகாரி CNA விடம் கூறினார்.
சிங்கப்பூரில் வீட்டு வேலை பார்க்க வரும் பெண்களின் முகவர் நிறுவனங்கள் சரியான வழியிலும் முழு ஆவணங்களோடும் இந்தோனேசியர்களை வேலைக்கு சேர்த்தால் பாதிப்பு நேரிடாது என்றும் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட நபரை வேலைக்கு எடுக்க முடியும் என்பதும் இந்தோனேசியத் தூதரகத்தில் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.