சிங்கப்பூரில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி 33 வயதுடைய பெண் Cove LRT நிலையத்தின் தடத்தில் இறந்து கிடந்தது தொடர்பாக பாசிரிஸ்-பொங்கோல் தொகுதி உறுப்பினர் Yeo Wan Ling கேள்வி எழுப்பினார்.
LRT நிலையங்களில் 2018-ஆம் ஆண்டு முதல் கண்ணாடி தடுப்பு இருக்கிறது.
எனினும், அதில் இடைவெளி இருப்பதைச் சுட்டி காட்டினார்.
அதற்கு விவரம் அளிக்கும் வகையில் நேற்று நாடாளுமன்றத்தில் போக்குவரத்து துணை அமைச்சர் Amy Khor பேசினார்.
நேற்று நடந்த நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரில் LRT ரயில் தடங்களில் ஏற்பட்ட விபத்து குறித்து விவரம் தந்தார்.
LRT நிலையம் MRT நிலையத்தைவிட சிறியதாக இருக்கிறது. அதனால்,கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அமைப்பதற்கு போதிய இடம் இருக்காது என்றார்.
அவற்றை அதையும் மீறி அமைத்தால் பயணிகளின் பாதுகாப்பு மேம்படும் என்று சொல்லமுடியாது என்றார்.
LRT தடத்தில் கடந்த பத்தாண்டுகளில் இரண்டு பேருக்கு மரணமும் ஒருவருக்கு காயமும் ஏற்பட்டதாக கூறினார்.