சிங்கப்பூரின் நடுத்தர, குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு சிறப்புத் தொகை வழங்கப்படும். வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க அது உதவும்.
அடுத்த மாதத்தில் சுமார் இரண்டரை மில்லியன் சிங்கப்பூரர்கள் வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகையாக 400 வெள்ளி பெற உள்ளனர்.
எந்த வகை வீட்டில் வசித்தாலும் ஆண்டுக்கு 100,000 வெள்ளி வரை வருமானம் ஈட்டும் அனைவருக்கும் சிறப்புத் தொகை கிடைக்கும்.
சுமார் 85,000 மூத்தோர்கள் வாழ்க்கைச் செலவின சிறப்பு தொகையுடன், மூத்தோர் போனஸ் சேர்த்து சுமார் 700 வெள்ளி பெறுவர்.
மேலும் 3 பில்லியன் வெள்ளி இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் உத்தரவாத தொகுப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்படும்.அதனை இவ்வாண்டு வரவு செலவு திட்டத்தின்போது துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.
பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் பொருட்சேவை வரி தொடர்பான செலவுகளைச் சமாளிக்க உதவும்.