சிங்கப்பூரில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் நோய் தொற்றின் எண்ணிக்கை 28,410.
அதனை அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டால் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் நோய் தொற்று எண்ணிக்கை 14,467.
பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்தது.
அதேபோல், அவசர சிகிச்சைப் பிரிவு அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.அந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தின் கடைசியில் குறைந்தது.
கோவிட்-19 நோய் பரவல் அவ்வப்போது சளி போன்ற நிரந்தர சுவாச நோய்களைப் போன்றே ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் கூறியது.
சிங்கப்பூரில் மிக நுணுக்கமாக கிருமி பரவல் நிலவரம் கண்காணிக்கப்படுகிறதாக தெரிவித்தது.
தற்போது சிங்கப்பூரில் XBB கிருமி பரவியுள்ளது. இந்த புதிய வகை கிருமி துணை ரக கலவைகளால் உருவானது என அமைச்சகம் CNA விடம் கூறியது.
இந்த புதிய வகை கிருமியால் நோய் தொற்றுப் பாதிப்பு கடுமையாக இல்லை என்பதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
பொதுமக்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.