சிங்கப்பூர் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் கருத்தாய்வு ஒன்று நடத்தியது. பொது இடங்களில் படுத்து தூங்குவோர் என்றழைக்கப்படும் Rough Sleepers எண்ணிக்கை குறித்த கருத்தாய்வு நடத்தப்பட்டது.
கருத்தாய்வின் முடிவில் அதன் எண்ணிக்கை சுமார் 40 விழுக்காடு குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட கருத்தாய்வில் சுமார் 530 ஆக இருந்தது.
அதேபோல், 2019-ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 921 ஆக பதிவாகி இருந்தது.
சிங்கப்பூரில் பொது இடங்களில் படுத்து உறங்குவோர்களின் விகிதம் நியூயார்க், ஹாங்காங் போன்ற நாடுகளில் காணப்படுவதை விட அது குறைவு.
இந்த கருத்தாய்வை லீ குவான் யூ பொதுக் கொள்கை ஆய்வு பள்ளி நடத்தியது. இப்பள்ளி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது.
வீடு இல்லாதவர்களை “Homeless´´ என்றும் , பொது இடங்களில் தூங்குபவர்களை “Rough Sleepers´´ என்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் வகைப்படுத்துகிறது.