பலமுறை நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவை மீண்டும் தொடங்க போகிறதா!!
மூன்றாம் நில வழி இணைப்பான சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் கட்டுமான பணிகள் குறைந்தது 65 சதவீதத்தை சிங்கப்பூர் முடித்துள்ளது.
இரு நாடுகளையும் இணைக்கும் ஆர்டிஎஸ் ரயில் பாதையில் கடல் மேம்பாலத்தில் முடிவடைந்த பணிகளை இரண்டு பிரதமர்களும் பார்வையிட்டனர்.
ஆர்டிஎஸ் வழித்தடத்தை உருவாக்குவது மிகப்பெரிய கட்டுமான பணி ஆகும்.
ரயில் வழித்தடத்திற்கான அடிமட்டத்தை அமைப்பதற்கு 50 சுமை தூக்கிகளும், துளையிடும் கருவிகள் தேவைப்படுகின்றன.
சிங்கப்பூர் அருகில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான அடித்தள தூண்களை அமைப்பதற்கான பணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்தது.
நான்கு கிலோமீட்டர் ரயில் இணைப்பு பாதை உட்லண்ட்ஸ் இல் உள்ள நார்த் ரயில் நிலையத்தில் தொடங்குகிறது.
அது மலேசியாவில் உள்ள Bongosagr ரயில் நிலையம் வரை செல்லும்.
அந்த ஐந்து நிமிட ரயில் சேவை 2026 ஆம் ஆண்டுக்குள் ஆரமிக்கபடும்.
பலமுறை நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவை 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.