சிங்கப்பூரில் மக்கள் செயல் கட்சி(PAP) நிர்வாகத்தில் உள்ள 15 நகரமன்ற வட்டார குடியிருகப்பாளர்கள் கூடுதல் சேவைப் பராமரிப்பு கட்டணத்தைச் செலுத்த வேண்டி வரலாம். வரும் ஜூலை மாதத்திலிருந்து உயர்த்தப்படும்.
கட்டணம் படிப்படியாக ஈராண்டுகளில் உயர்த்தப்படும்.அதனை நேற்று (ஜூன் 1) மரீன் பரேட் நகரமன்றம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக இவ்வாண்டு ஜூலை மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
குடியிருக்கும் வீட்டின் அளவுக்கு ஏற்ப 70 காசு முதல் 7 வெள்ளி 90 காசு வரை கட்டணம் உயர்த்தப்படும்.
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி ஒரு வெள்ளியிலிருந்து 9 வெள்ளி 10 காசு வரை கட்டணம் உயர்த்தப்படும்.இது இரண்டாம் கட்ட கட்டண உயர்வு.
சேவைப் பராமரிப்பு கட்டணத்தை கூடுதல் படுத்தபடாவிட்டால் பெரும்பாலான நகரங்கள் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடலாம் என்று மக்கள் செயல் கட்சி(PAP) நிர்வாக நகர மன்றங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் Lim Biow Chuan கூறினார்.
இதற்குமுன் 2017-இல் சேவை பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டது.
குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொருள்,சேவை வரி பற்று சீட்டுகளில் சேவை பராமரிப்பு கட்டணத்திற்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.