ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் சிங்கப்பூர் செல்ல முடியுமா?

நீங்கள் ஒரு ரூபாய் கூட பணம் கட்டாமல் சிங்கப்பூர் செல்ல முடியும்.அதற்கென அப்ளிகேஷன்கள் மற்றும் வெப்சைட்கள் உள்ளன.அதில் கம்பெனிகளே நேரடியாக வேலை வாய்ப்புகளை பதிவிடும்.ஏஜென்ட்கள் தலையீடு இருக்காது.அவர்கள் பதிவிடும் வேலைக்கான தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் விண்ணப்பித்து அதில் செலக்ட் ஆகி விட்டால் சிங்கப்பூர் செல்லலாம்.ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் செல்ல முடிவதற்கான வாய்ப்பு அதிகமாக என்று கேட்டால் அது குறைவு தான்.அதில் பதிவிடப்பட்டிருக்கும் வேலைகளில் ஒரு சில வேலைக்கு சிங்கப்பூரில் இருப்பவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் அல்லது Singpass id வேண்டும் என்று இருக்கும்.நீங்கள் இந்தியாவில் இருந்து விண்ணப்பித்தால் உடனடியாக கம்பெனியிடம் இருந்து பதில் வராது.ஏனென்றால், நீங்கள் நேரடியாக முயற்சி செய்வதால் அவர்களிடம் இருந்து பதில் வருவதற்கு சற்று காலதாமதம் ஆகலாம்.அதனால் உங்களின் பொறுமையை இழக்காமல் முயற்சி செய்யுங்கள்.
அப்ளிகேஷன்கள் :
▫ JobsDB SG – Jobs in Singapore
▫ Jobstreet : Job Search & Career
▫ LinkedIn : Jobs & Business News
▫ All Jobs In Singapore
▫ Gulf Walkin
▫ Abroad jobs for Indians
இது போன்ற அப்ளிகேஷன்களில் (App) சிங்கப்பூர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
வெப்சைட்கள் :
▪️ www.jobcentral.com.sg
▪️ www.stjobs.sg
▪️ www.monster.com.sg
▪️ www.mycareersfuture.sg
▪️ www.fastjobs.sg
சிங்கப்பூர் Registered அப்ளிகேஷன்களில் (App) வேலைகளைத் தேட வேண்டும். சிங்கப்பூர் Registered இணையத்தளங்களில் ஏமாறும் வாய்ப்புகள் குறைவு.இவைகளில் கூட ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.உங்களிடம் பணம் கேட்டால் கட்டி விடாதீர்கள்.கம்பெனிகள் நேரடியாகவே ஆட்களை எடுப்பதால் அவர்கள் பணம் கேட்பதற்கான வாய்ப்பு இல்லை.
அவைகளில் பதிவிடப்பட்டுள்ள வேலைகளில் உங்களுக்கு தகுதி இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.அதற்கு singpass id கேட்டால் விண்ணப்பிக்க வேண்டாம்.ஏனென்றால் நீங்கள் இந்தியாவில் இருந்து முயற்சி செய்வதால் உங்களிடம் singpass id இருக்காது.சிங்கப்பூரில் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அல்லது singpass id கொடுக்க வேண்டும் என்று எதுவும் குறிப்பிடாமல் இருக்கும் வேலைகளுக்கு நீங்கள் முயற்சி செய்யலாம். அல்லது அந்த வேலைகளில் கம்பெனியின் இ-மெயில் id இருக்கும் .அதற்கு நேரடியாகவும் முயற்சி செய்து பார்க்கலாம்.
நீங்கள் முயற்சி செய்த வேலைக்கு அவர்களிடம் இருந்து வரும் பதிலில் சிங்கப்பூரில் இருப்பவர்களை எடுக்கிறோம் என்று இருக்கும்.அல்லது S PASS ,E PASS இல் எடுக்கிறோம் என்றும்,நீங்கள் இன்டெர்வியூக்கு செலக்ட் ஆகி விட்டீர்கள் என்று கூறினால் இன்டெர்வியூவில் கலந்து கொள்ளுங்கள்.அதில் நீங்கள் செலக்ட் ஆனதற்கு பிறகு MOM இல் அப்ளை செய்வார்கள்.உங்களுக்கு எந்த பாஸில் வேலைக்கு அப்ளை செய்தார்கள் என்பதையும் கூறி விடுவார்கள்.MOM இல் நீங்களே செக் செய்யலாம்.அதற்கு ஒரு ரூபாய் கூட பணம் கேட்க மாட்டார்கள்.அந்த கம்பெனியின் HR நேரடியாக தொடர்பு கொள்வார்கள்.நீங்கள் இன்டெர்வியூவின் போது சம்பளம்,உணவு,ரூம் ஆகியவற்றையும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.நீங்களே ரூம் தேடிக்கொள்ள வேண்டும் என்று கூறினால் அதற்கென வெப்சைட்களும் இருக்கிறது.ரூம் தேடும் போது அட்வான்ஸ் கேட்டால் சிங்கப்பூர் வந்தவுடன் நேரடியாக பணம் கொடுப்பதாக கூறுங்கள்.
டாக்குமெண்ட்கள் :
▫ RESUME (உங்களுடைய Passport size photo,Contact number/வாட்சப், இ-மெயில் id,முகவரி,Experience & Qualification என அனைத்தும் resume இல் இருக்க வேண்டும்)
▫ Passport copy
▫ Passport
▫ 10th & 12th ,college ,over all marksheet certificate
▫ RMI (இருந்தால்)
▫ Full size photo
▫ Passport size photo
▫ இந்த அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் இதே வரிசைமுறையில் ஒரே PDF க்குள் இருக்குமாறு தயார் செய்து கொள்ளுங்கள். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.உங்களுடைய டாக்குமெண்ட்களை நெட் சென்டரில் முறையாக ஸ்கேன் செய்து pdf ஆக வைத்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய மொபைலில் ஸ்கேன் செய்து அனுப்பினால் உங்களுடைய டாக்குமெண்ட் ரிஜெக்ட் ஆக வாய்ப்புள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan