சிங்கப்பூருக்கு 2024 ஜூலை மாதம் டெஸ்ட் அடித்து செல்வதற்கு சாத்தியமா? இல்லையா? என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்!!

சிங்கப்பூருக்கு 2024 ஜூலை மாதம் டெஸ்ட் அடித்து செல்வதற்கு சாத்தியமா? இல்லையா? என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்!!

சிங்கப்பூருக்கு 2024 ஜூலை மாதம் டெஸ்ட் அடித்து செல்வதற்கு சாத்தியமா? இல்லையா? என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்!!

சிங்கப்பூர் செல்ல பல பெர்மிட்கள் உள்ளன. அதில் ஒர்க் பெர்மிட்டும் ஒன்று.நீங்கள் மற்ற பெர்மிட்கள் மூலம் செல்வதை விட டெஸ்ட் அடித்து சென்றால் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.நீங்கள் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வேறு கம்பெனிக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்த தொகையே செலவாகும்.
இதே நீங்கள் மற்ற பெர்மிட்களில் வேலைக்கு சென்றால் ஒவ்வொரு முறையும் புதிதாக செல்வது போல் செல்ல வேண்டும். அதற்கு பணமும் அதிகமாக செலவாகும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக நிறைய டெஸ்ட் சென்டர்களை மூடப்பட்டன.
தற்போது ஒரு சில டெஸ்ட் சென்டர்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

அதற்கு முக்கியமான காரணம் Quota பிரச்சனை.மிகவும் குறைவான Quota உள்ளதால் டெஸ்ட் சென்டர்கள் முன்கூட்டியே அட்மிஷன் போடுகிறார்கள். அதன்பிறகு வரிசைமுறையில் ஒவ்வொரு ஆளாக ட்ரைனிங் கொடுத்து சிங்கப்பூருக்கு அனுப்புகிறார்கள்.
ஆனால் அதிலும் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். டெஸ்ட் சென்டர்களே கம்பெனிகளைத் தேர்ந்தெடுத்து சிங்கப்பூர் வேலைக்கு அனுப்புகிறார்கள்.தற்போது இந்த சூழல் தான் நிலவி வருகிறது.

ஒரு சிலர் சிங்கப்பூர் சென்ற பிறகு அங்கேயே டெஸ்ட் அடிக்கலாம் என்று நினைப்பவர்களும் உள்ளனர்.

பெரும்பாலானவர்கள் Shipyard,PCM Permit போன்ற பெர்மிட்களில் சிங்கப்பூருக்கு சென்று அங்கு டெஸ்ட் அடித்தனர். தற்போது அதையும் நிறுத்தி விட்டார்கள். ஏனென்றால் நீங்கள் வேலைப் பார்க்கும் கம்பெனியிலிருந்து டெஸ்ட் அடிப்பதற்கு லெட்டர் வாங்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில கம்பெனிகள் மட்டும் தான் low leavy தேவைப்படுபவர்கள் high leavy கட்டி ஆட்களை சிங்கப்பூருக்கு எடுத்து பின் அவர்களை டெஸ்ட் அடிக்க செய்கிறார்கள் ஆனால் அது மிகவும் குறைவு.

Shipyard,PCM Permit போன்ற பெர்மிட்டில் ஆட்களை எடுக்கும் கம்பெனிகளுக்கு டெஸ்ட் அடித்தவர்கள் தேவையில்லை. அதனால் டெஸ்ட் அடிப்பதற்கான லெட்டரை கம்பெனி கொடுக்காது.வேறு எப்படி அங்கு டெஸ்ட் அடிக்கலாம்?.Low Levy தேவைப்படுகிற ஒரு சில கம்பெனிகள் High Levy இல் ஆட்களை எடுத்து அவர்களே டெஸ்ட் அடிப்பதற்கான அனுமதி அளிக்கிறார்கள். ஆனால் இது போன்று நடப்பது மிகவும் அரிது.

வேறு என்ன செய்யலாம்?

நீங்கள் டெஸ்ட் அடிப்பதற்கு பணம் கட்டிவிட்டு Quota வரும்வரை காத்திருக்கலாம்.அப்படி இல்லை என்றால் வேறு பெர்மிட்களில் சிங்கப்பூர் வேலைக்குச் சென்று வேறு ஏதாவது கோர்ஸ் படித்து அதன் மூலம் உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம். டெஸ்ட் அடித்து செல்பவர்களை விட மற்ற பெர்மிட்டில் செல்பவர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். அதனால் நீங்கள் மற்ற கோர்ஸ்களை முடித்து வைத்திருந்தால் கம்பெனியில் வேறு அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.