சிங்கப்பூரில் மெர்லியன் சிலையை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதா!! எப்போது?

சிங்கப்பூரில் மெர்லியன் சிலை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதா!! எப்போது?

சிங்கப்பூரில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை மெர்லியன் பூங்காவில் உள்ள மெர்லியன் சிலையை புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆற்றின் கரையில் மெர்லியன் சிலை 1972 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் லீ குவான் யூ திறந்து வைத்தார்.

இந்த சிலை 8.6மீ உயரமும்,70 டன் எடையும் கொண்டது.

“ஜுலை 5ம் தேதி அன்று மெர்லியன் சிலை பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டிருக்கும்.மேலும் அதை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கிடையாது” என சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் STB கூறியது.

அங்கு வருகைத்தருவோர்கள் தெரிந்து கொள்வதற்காக அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

எனினும் அந்த ஐந்து நாட்களில் அதன் அருகே உள்ள சிறிய மெர்லியன் சிலையை புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு என்றும் கூறியது.

பராமரிப்பு மற்றும் தடுப்பு பணிகளின் போது சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடுகிறோம்” என STB தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 13 -ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.