இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது சுலபமானதா?

இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது சுலபமானதா?

இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது சுலபமானதா? அல்லது நேரடியாக லைசென்ஸ் எடுப்பது சுலபமானதா?

சிங்கப்பூரை பொறுத்தவரை டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது மிகவும் சிறந்த ஒன்று. நீங்கள் முதலில் ஜென்ரல் ஒர்க்கர் வேலைக்கு சென்று, அதன் பின் நம் தகுதியை உயர்த்திக்கொள்ள டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது மிகச் சிறந்தது.

டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

இந்திய டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸாக மாற்றலாம். அல்லது நேரடியாக சென்று லைசன்ஸ் எடுக்கலாம்.

இந்தியா டிரைவிங் லைசன்ஸை சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

இந்தியா டிரைவிங் லைசன்ஸை சிங்கப்பூர் லைசன்ஸாக மாற்ற குறைவான செலவே ஆகும். இதற்கு Basic Theory இல் பாஸ் ஆனால் போதும்.

நீங்கள் வைத்திருக்கும் இந்தியா டிரைவிங் லைசென்ஸ் Chip லைசென்ஸாக இருக்க வேண்டும்.

அதோடு உங்களுடைய பெர்மிட்டின் காலஅவகாசம் குறைந்தது 13 மாதமாக இருக்க வேண்டும்.அப்படி இல்லையெனில் நீங்கள் சிங்கப்பூர் சென்று 13 மாதம் ஆகியிருக்க வேண்டும். Chip லைசென்ஸ் இல்லாமல் இருந்தாலும் அல்லது நீங்கள் சிங்கப்பூர் சென்று 13 மாதம் ஆகாமல் இருந்தாலும் அல்லது உங்களுடைய பெர்மிட்டின் காலஅவகாசம் குறைந்தது 13 மாதங்கள் ஆகாமல் இருந்தாலும் உங்களால் சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸாக மாற்ற முடியாது.

உங்களிடம் Chip இல்லாத இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் அதனை சிங்கப்பூர் டிரைவிங் லைசன்ஸாக மாற்ற வேண்டும் என்றால், சிங்கப்பூரில் MOM – விடம் லெட்டர் வாங்க வேண்டும். மேலும் இந்தியா லைசன்ஸை மாற்றும் போது ஒரிஜினல் பாஸ்போர்ட் கேட்கப்படும். அதை மாற்றும் போது ஏதேனும் எழுத்துப்பிழை இருந்தால் கூட திருப்பி அனுப்புவதற்கு வாய்ப்புள்ளது.உங்கள் கைக்கு லைசென்ஸ் வரும் வரை பதற்றதுடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருக்க வேண்டும்.

நேரடியாக சென்று லைசென்ஸை எடுக்க என்ன செய்ய வேண்டும்?

இதற்கு இந்தியா டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை.அதோடு உங்களுடைய பெர்மிட்டின் காலஅவகாசம் அல்லது நீங்கள் சிங்கப்பூர் வந்து 13 மாதங்கள் ஆகிவிட்டதா? என்பதெல்லாம் தேவையில்லை. நீங்கள் உங்களுடைய இந்தியா லைசென்ஸை மாற்றுவதை விட நேரடியாக சென்று சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது மிகவும் நல்லது.

நேரடியாக லைசென்ஸ் எடுக்க Basic Theory, Final Theory எழுத வேண்டும். அதற்கான கிளாஸ்கள் புக் செய்ய வேண்டும்.

நீங்கள் லைசன்ஸை மாற்றும் போது நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அதற்கு குறைந்தது $1000 வரை செலவாகும்.

நீங்கள் நன்கு படித்துவிட்டு உங்களுக்கு எந்த வழி சிறந்தது, சுலபமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.