மின்னணு நாணயத்திற்கான தரைநிலைகளை உருவாக்க சிங்கப்பூர் நாணய வாரியம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு நாணயத்தை எப்படி மாற்றுவது,வங்கியில் மின்னணு நாணயத்தை எப்படி செலுத்துவது போன்ற விவரங்கள் பரிந்துரைகளில் அடங்கும்.
அது குறித்து நேற்று (ஜூன் 21) வெள்ளை அறிக்கை வெளியிட்டது.
ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மின்னணு நாணயத்தை மாற்றுவதற்குமுன் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மற்ற நாடுகளின் மத்திய வங்கிகள்,நிதி நிறுவனங்கள்,நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பரிந்துரைகளைத் தயார் செய்ததாக நாணய வாரியம் கூறியது.
மின்னணு நாணய பரிவர்த்தனை சிங்கப்பூருக்கு வரலாம்.ஆனால், அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகலாம் என்று பொருளாதார நிபுணர் கூறினார்.