Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் பலருக்கு இருக்கும் கேள்வி. மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால்தான் சிங்கப்பூருக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதில் முக்கியமாக பூஸ்டர் தடுப்பூசி கண்டிப்பாக போட்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி தான் பலரிடம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பதில் தான் இது.

ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சில கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால், சிங்கப்பூர் ரூல்ஸ் படி பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை.

Work Permit மூலம் சிங்கப்பூர் வருபவர்கள் மூன்று நாள் Quarantine-இல் இருப்பார்கள். அவர்கள் இரண்டாவது தடுப்பூசி போட்டு ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருந்தால், நான்காவது நாள் தங்க வைத்து பூஸ்டர் தடுப்பூசி போட்டு அனுப்புவார்கள்.

நீங்கள் இரண்டாவது தடுப்பூசி போட்டு ஆறு மாதத்திற்குள் இருந்தால் பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை.