வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!!

வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!!

மேற்கு பிரான்சின் வெண்டீ பகுதியில் உள்ள ஒரு வாத்து பண்ணையில் பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நோட்டரி டேம் டி ரியெஸ் நகரத்தில் உள்ள 8,700 வாத்துகளை கொண்ட ஒரு பண்ணையில் இந்த பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பண்ணையில் உள்ள அனைத்து வாத்துகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

பிரான்சில் நவம்பர் 27 முதல் இதுவரை ஏழு பறவைக் காய்ச்சல் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக பறவைக்காய்ச்சல் காட்டு பறவைகளால் பரவுகிறது.

எனவே வைரஸ் பரவுவதை தடுக்க பண்ணைகளில் உள்ள பறவைகளை பாதுகாப்பாக உள்ளேயே வைத்திருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.