ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!!

சென்னை: சென்னையில் இன்று(28.03.2025) ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் போட்டி முடிந்து விட்டு வீடு திரும்பும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இன்று அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்படி, இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
அரசு கார்டன் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலைய மெட்ரோவை நோக்கி அதிகாலை 1 மணிக்கு கடைசி மெட்ரோ ரயில் புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக அரசு கார்டன் மெட்ரோ நிலையத்தை அடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டுகளை காண்பித்தால் அவர்கள் மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan