பிரேசில் விமான விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள்...!!
பரானா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் ஒன்று காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 62 பேர் உயிரிழந்தனர்.
அனைவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விமானம் காஸ்கேவலிலிருந்து சாவ் பாலோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:30 மணியளவில் நகரின் வடமேற்கே 80 கிமீ (50 மைல்) தொலைவில் உள்ள வின்ஹெடோவில் விழுந்தது.
அங்கு விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளை பிரேசில் அதிகாரிகள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்திற்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் Luiz Inacio Lula da Silva அறிவித்திருந்தார்.
விபத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வாளர்கள் விமானத்தின் இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை ஆய்வு செய்கின்றனர்.
இந்த விபத்து குறித்த வீடியோவில் விமானத்தின் சிதைவுகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து கிடப்பதை காணலாம்.
Follow us on : click here