சிங்கப்பூரில் 112 பேர் மீது விசாரணை!!

சிங்கப்பூரில் 112 பேர் மீது விசாரணை!!

சட்டவிரோதமாக கடன் கொடுத்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 112 பேரை சிங்கப்பூர் காவல்துறை விசாரித்து வருகிறது.

அவர்கள் 16 முதல் 17 வயதுள்ளவர்கள்.தீவு முழுவதும் செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டன.

அவர்களில் 22 பேர் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று
துன்புறுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்டவிரோதமாக கடன் கொடுப்பவர்களுக்கு 47 பேர் துணைப்புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் ATM பரிவர்த்தனை செய்ததாக நம்பப்படுகிறது.

சந்தேக நபர்களில் ஒருவர் 6 சிம்களைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மீதமுள்ள 42 பேர் வங்கி கணக்குகளைத் தொடங்கி ATM,தனிநபர் அடையாள எண்,இணைய வங்கிச் சாதனங்கள் உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக கடன் வழங்குபவர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.