மொழி கற்றலை ஊக்குவிக்கும் சிறுவர் கதை நேர இணையதளம் அறிமுகம்!!

மொழி கற்றலை ஊக்குவிக்கும் சிறுவர் கதை நேர இணையதளம் அறிமுகம்!!

சிங்கப்பூர்: இளம் வயதிலேயே தமிழ் மொழி கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ‘சிறுவர் கதை நேரம்’ எனும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும் காணொளி கதைகளை தயாரித்துள்ளது கற்றல் வளங்களை மேம்படுத்த அது உதவும்.
இந்த புதிய முயற்சியை ABCs of tamil நிறுவனம் எடுத்துள்ளது.

இந்த முயற்சி இரு மொழி கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

siruvarkathaineram.com இணையதளத்தில் கண்களை பறிக்கும் காட்சிகள், கவனத்தை ஈர்க்கக்கூடிய விளக்கங்களுடன் சிறுவர்களை கவரும் வண்ணம் கதைகள் உள்ளன.

இந்த இணையதளமானது இரண்டு முதல் ஒன்பது வயதுகளுக்குட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ABCs தமிழ் நிறுவனர் ஆயிஷா இக்பால் கூறியதாவது,
எழுத்துக்கள் மற்றும் சொற்கள் மொழியின் அடித்தளம்.மேலும் சிறுவர் கதை நேரம் அவர்களுக்கு சொற்களை அறிமுகப்படுத்தி அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளையாட்டுத்தனமான முறையில் விளக்குகிறது. ஓர் உயிரோவியம் பார்த்தீர்கள் என்றால் அது நடனமாகிறது.மேலும் அதில் குழந்தைகளுக்கு பிடித்த கவர்ச்சியான வண்ணங்கள் இருக்கிறது. வீடியோவில் உள்ள விளையாட்டு,வண்ணம் மற்றும் பேச்சு வரும்போது அதன் வாய் அசைவு இவை அனைத்தும் பிள்ளைகளின் கவனத்தை ஈர்க்கிறது.

இது குழந்தைகள் ஆர்வத்துடன் கதைகளை கேட்க வைக்கிறது.

இளையதளத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகள் சிங்கப்பூரின் முக்கிய இடங்கள், உணவு வகைகள் மற்றும் தொழில்துறை பற்றி விளக்குகின்றன.

தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் எளிமையாக கறபிக்கப்படுகின்றன. குறிப்பாக உரையாடுவதில் சிரமப்படும் குழந்தைகளுக்கு அவர்கள் பயன்படுத்தி உள்ள யுத்திகள் எடுத்துக்காட்டாக காட்சிகள், வண்ணம் ஆகியவை மிக சுவாரஸ்யமாக குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள உதவுகிறது.

மேலும் இந்த தலைமுறையில் உள்ள குழந்தைகள் தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கேலிச்சித்திரங்களில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

பிள்ளைகள் தமிழ் மொழியை கற்றுக் கொள்வதற்கும் தமிழ் பேசுவதற்கும் இது உதவும்.

ஒவ்வொரு கதையும் சில விளையாட்டுகளுடன் சேர்ந்துள்ளது.
இது சொல் மற்றும் புரிதலையும் மேம்படுத்த இது உதவும் என்று நம்பப்படுகிறது.பிள்ளைகளுடன் பேசி அவர்கள் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள கலந்துரையாடல் என்ற அங்கமும் இதில் அடங்கும்.

இந்த இணையதளம் தேசிய நூலக கட்டடத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இந்த முயற்சியை விரிவுபடுத்த ABCs tamil நிறுவனம் விரும்புகிறது.