KK மருத்துவமனையின் புதிய சேவை அறிமுகம்!! இனி காணொளி வழியில்!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையானது ‘KK TelePaeds’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனால் குழந்தைகள் மற்றும் பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் பல மணி நேரம் காத்திருப்பது குறைகிறது.
இந்த சேவையினை பயன்படுத்தி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை பெற முடியும்.
இது 3 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேகே மருத்துவமனையின் குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவு இந்த சேவையை நடத்துகிறது.
குழந்தைகளுக்கு மருத்துவ சேவைக்கான முன்பதிவு செய்து கொள்வதற்கும்,குழந்தையின் நலன் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கும்,மருந்து மாத்திரைகளை வீட்டில் விநியோகம் செய்வதற்கும், மருத்துவச் சான்றிதழ்களை பெறுவது உள்ளிட்ட சேவைகளை வழங்கும்.
மேலும் குறிப்பிட்ட மருத்துவ நிபுணர்களைப் பார்க்க பரிந்துரைகளைப் பெறுவது போன்ற பல வசதிகளை இது வழங்குகிறது.
இந்த சேவையானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.
Follow us on : click here