உணவு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு புதிய ஆராய்ச்சித் திட்டங்கள் சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
CREATE ஆய்வு அமைப்பு அதன் 16-ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதத்தில் புதிய ஆய்வு திட்டங்களைத் தொடங்கியது.
சிங்கப்பூர்,அமெரிக்கா,இஸ்ரேல்,தென் கொரியா ஆகிய நாடுகளின் உயர்கல்வி நிலையங்களுடன் இணைந்து புதிய ஆய்வு திட்டங்களில் சேர்ந்து பணியாற்றும்.
நீண்ட காலத்திற்கு மீள்திறன் கொண்ட நகரங்களை உருவாக்குவதே அதன் நோக்கம்.
சிங்கப்பூரின் உணவு தேவையில் 30 சதவீதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
CREATE ஆய்வரங்கில் துணைப் பிரதமர் Heng Swee Keat அந்த விவரத்தைப் பற்றி பேசினார்.