சிங்கப்பூரில் மேற்கு வட்டாரத்தில் தெங்கா பகுதியில் புதிய நகர் உருவாக இருப்பதால் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.
இதனால் அங்குள்ள சிறுவர்களுக்காக புதிய சிறுவர் மருந்தகத்தைத் திறந்து உள்ளது.
இந்த புதிய மருந்தகம் Ng Tng Fong மருத்துவமனையில் திறந்திருக்கிறது.மேற்கு வட்டாரத்தில் இருக்கும் புதிய குடியிருப்பு பேட்டைகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
அந்த வட்டாரத்தில் 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் கிட்டத்தட்ட 5 விழுக்காட்டினர்.
மேற்கு வட்டாரத்தில் மேலும் மக்கள்தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் Ng Tng Fong பொது மருத்துவமனையின் சிறுவர் நிலையமும்,தேசிய பல்கலைக் கழகப் பெண்கள் சிறுவர் நிலையமும் இணைந்து 16 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்குச் சிறப்பு சேவை வழங்கி வருகின்றன.