சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்!

Tan Chuan-Jin, மரீன் பரேட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் Chai Chee வட்டாரத்தில் வசிக்கும் ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவக்கூடிய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர்களுக்கு உதவ இலவச பல் மருத்துவம் அளிக்கப்பட உள்ளது.

அதன் மூலம் கிட்டத்தட்ட 1,400 பேர் பலன் அடைவர்.

அந்த இலவச சேவையை Q&M பல்மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த 50 மருத்துவர்கள் வழங்குவார்கள்.

அந்த இலவச பல்மருத்துவத்துக்கு சுமார் 500,000 வெள்ளி நன்கொடை கிடைத்துள்ளது.இலவச பல் மருத்துவமனையின் ஆரம்ப செலவை ஈடுகட்ட அது கிடைத்திருக்கிறது.

அங்கு பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.அதில் பற்களைச் சுத்தம் செய்யும் சேவையும் அடங்கும்.

உதவி தேவைப்படும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காண்பதற்கு அறக்கட்டளை உதவும்.