சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு நிபுணர்களின் எண்ணிக்கையை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
SkillsFuture கருத்தரங்கில் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் அந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
Skills Pathway for Cybersecurity திட்டம் சிங்கப்பூர் கணினி சங்கத்தால் உருவாக்கப்பட்டது.
சிங்கப்பூர் சைபர் செக்யூரிட்டி அமைப்பு,GovTech, ST இன்ஜினியரிங் உள்ளிட்ட 13 நிறுவனங்களின் உதவியுடன் இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
சைபர் செக்யூரிட்டி துறையில் சேர விரும்புபவர்கள், பணியிடை மாற்றம் செய்ய விரும்புவோர் உள்ளிட்டவைகளுக்கு இந்த திட்டம் வழி வகைக்கும்.
இத்திட்டத்தின் கீழ் தொழில்துறை பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இன்டர்ன்ஷிப், வேலை நேர்காணல் போன்றவற்றுக்கான வாய்ப்புகளும் உள்ளன.
மேலும் வேறு வேலைகள் மற்றும் தொழில் பாதைகளுக்கு மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
Follow us on : click here