சிங்கப்பூரில் தாக்குதல் சம்பவங்களை தெரிவிக்க பல இணைய தளங்கள் இருக்கிறது. இப்பொழுது புதிதாக SHECARES@SCWO மற்றொரு இணைய தளம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.மிரட்டல் விடுப்பவர்கள், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவர்கள்,தொல்லைக் கொடுப்பவர்கள்,தனிநபர் விவரங்களைத் தேடுப்பவர்கள் ஆகியவை அதில் அடங்கும்.
SHE என்பது SG Her Empowerment எனும் அமைப்பு மக்களுக்கு இலவச சேவைச் செய்யும் நோக்கில் செயல்படுவதாக கூறினார்கள்.
இந்நிலையத்தில் 50 வழங்கறிஞர்கள்,2 ஆலோசகர்கள் இடம் பெற்றிருப்பர்.பாதிக்கப்பட்டோர்கள் அவர்கள் பிரச்சனையை முன் வந்து சொல்லுபவர்களுக்கு இலவச ஆலோசனைச் சேவையை வழங்குகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் இவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் 10-ல் 6-க்கும் மேற்பட்ட பெண்கள் இணைய தள அச்சுறுத்தலுக்கு ஆளாகுகிறார்கள்.
இவ்வாறு பாதிக்கப்படும் பொழுது எங்கு உதவி கேட்டு அனுகுவது குறித்து அவர்களுக்கு தெரியவில்லை என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்ததாக அவர்கள் கூறினார்கள்.
புதிய நிலையம் அரசாங்கத்துடன் இணைந்து பல விழிப்புணர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நடத்த அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து செயல் பட்டு பணியாற்றுவோம் என்று கூறினார்கள்.