சிங்கப்பூரில் Punggol வட்டாரத்தில் புதிய நூலகம் அதிகாரப்பூர்வமாக நேற்று( ஜனவரி,30-ஆம் தேதி ) திறக்கப்பட்டது. புதிய Punggol வட்டார நூலகம் One Punggol ல் அமைந்துள்ளது.இதில் 2 மாடிகள் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.இந்த நூலகம் பொது மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
Punggol இல் 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் அதிகம் வசிக்கும் இடம் ஆகும். சிங்கப்பூரில் 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் அதிகம் வசிக்கும் இடத்தில் இதுவும் ஒன்று.இதில் மொத்தம் 5 மாடிகள் இருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் மற்ற பகுதிகளிலும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினர்.இந்த நூலகம் சிங்கப்பூரின் பெரிய வட்டார நூலகமாகும்.
இதில் தொண்டுழியர்கள் இணைந்துச் செயல்படுகின்றனர். மொத்தம் 200 க்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தன.தொண்டுழியர்கள் ஒரு சில திட்டங்களுக்கு உதவ முன்வந்து இருக்கின்றனர்.
நூலகத்தின் புதிய அம்சங்களை அறிந்துக் கொள்வதற்கும்,பிள்ளைகளுக்கான ஆதரவுத் திட்டங்கள்,புத்தங்களை இரவல் பெறுதல் போன்றவற்றைக்கு உதவ முன்வந்துள்ளனர்.