பாலர் பள்ளியில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இரப்பை குடல் அலர்ஜி!! வைரஸ் தொற்று காரணமா?
சிங்கப்பூரில் Tanjong Pagar-ல் உள்ள ஒரு பாலர் பள்ளியில் 8 பச்சிளம் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சிங்கப்பூர் ஒருங்கிணைந்த சேவைகள் கூட்டுறவு அமைப்பால் நடத்தப்படும் Haven Infant மற்றும் Toddler சென்டரில் 16 கைக்குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்கள் உள்ளனர்.
அவர்களில் 8 குழந்தைகளுக்கு இரைப்பை குடல் அலற்சிக்கான அறிகுறிகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இது வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தொற்றுக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அது பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறினர்.