அடுத்த ஐந்தாண்டில் தீவெங்கும் வினாடிக்கு 10 gigabits இணைய சேவை வேகத்தை எதிர்பார்க்கலாம்.
விரைவில் இணைய சேவை சிங்கப்பூரில் மேலும் வேகம்பிடிக்க உள்ளது.
அந்த விவரங்களைப் பற்றி நாட்டின் இணைய தொடர்பை மேம்படுத்துவது குறித்த புதிய நகல் அறிக்கை முன்வைத்துள்ளது.
புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற நாடு தயாராக இருக்க வேண்டும் என்று தொடர்பு, தகவல் அமைச்சரும்,அறிவார்ந்த தேசம் இணைய பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான Josephine teo கூறினார்.
சிங்கப்பூரின் இணைய சேவை உலகத்துடனான தொடர்பை வலுப்படுத்தும் என்று புதிய நகல் அறிக்கை தெரிவிக்கிறது.
Singpass,SGFinDex போன்ற சேவைகளின் பயன்பாட்டை மேலும் விரிவுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.