இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!!

இணையச் சேவை பாதிப்பு!! ஸ்தம்பித்துள்ள உலக நாடுகள்!! சிங்கப்பூரிலும் தடங்கல்!!

உலகெங்கும் இணைய சேவைகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பல சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளில் முக்கிய வங்கிகள்,ஊடகங்கள், விமான நிறுவனங்களின் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இணையச் சேவை தடங்கலால் சிட்னி விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்திலும் இணையச் சேவை கோளாறால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையம் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் சில விமான நிறுவனங்களின் பயணிகள் வருகை பதிவு செய்யும் நடைமுறையை மேற்கோள்கின்றனர்.

மேலும் விமான நிலைய ஊழியர்களும் பயணிகளுக்கு உதவி செய்கின்றனர் என்றும் கூறியது.

இணையக் கோளாறால் ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.

விமான சேவை மட்டுமல்லாமல் singpost தபால் சேவை நிறுவனத்தின் சேவையிலும் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

தடங்கலுக்கு அது மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மீண்டும் இயல்புநிலைக்கு திரும்ப தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தது.

Exit mobile version