Singapore Breaking News in Tamil

இணைய பாதுகாப்பு மிரட்டல்கள்! சிங்கப்பூரில் இவ்வாண்டுக்குள் வர உள்ள புதிய திட்டம்!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு இணையத்தள மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு அதிகாரிகளிடம் சுமார் 8,500 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அதற்கும் முந்தைய ஆண்டை பதிவான சம்பவங்களை விட அது ஒரு மடங்கு அதிகம்.2021-ஆம் ஆண்டு 3100 மோசடி சம்பவங்கள் புகார்கள் வந்தன.

அந்த விவரங்களை சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு வெளியிட்ட வருடாந்திரா அறிக்கையில் தெரிவித்தது.

80 சதவீதத்துக்கும் அதிகமான போலி இணையத்தளங்கள் வங்கி மற்றும் நிதி சேவை துறையைச் சேர்ந்த நிறுவனங்களாக தோன்றி உள்ளன.

அரசு, தளவாட சேவை(Logistics Service) வழங்கும் நிறுவனங்கள் போல போலி பக்கங்களும் இருந்தன.

கடந்த ஆண்டு பிணைத்தொகை கோரும் மால்வேர் தொடர்பான 132 சம்பவங்களும் பதிவாகியது.

அதன் எண்ணிக்கை சற்று குறைந்தபோதிலும் அது பெரிய பிரச்சனையாகவே தொடர்வதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மின்னிலக்க தளங்களில் தங்களை நிறுவனங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும்.அதோடு அவர்களின் இணைய பாதுகாப்பையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக 2021-ஆம் ஆண்டில் SG Cyber Safe திட்டத்தை சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு அறிமுகப்படுத்தியது.

மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வை அதிகபடுத்தும் வகையில் இந்த ஆண்டு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விருக்கிறது.

“கடந்த ஆண்டு இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.அதற்கு எதிரான முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்கிறது.அதற்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் ஆதரவு தேவை´´ என இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகி David Koh கூறினார்.